வெள்ளையை விட பழுப்பு நிற ஓடு முட்டையே இயற்கையானது மற்றும் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது என்று நம்புகிறோம். ஆனால் இது உண்மையில்லையாம்!
சிவப்பு நிற இறகுகள் & காதுகள் கொண்ட கோழி பழுப்பு நிறத்திலும், வெள்ளை நிற இறகுகள் & காதுகள் கொண்ட கோழி வெள்ளை நிறத்திலும் முட்டையிடும் என்கிறது அமெரிக்க இதழ் ஒன்றின் செய்தி.
கோழியின் இனத்தை பொறுத்தே முட்டை ஓடுகளின் நிறம் தீர்மானிக்கப்படுவதாகவும், முழுக்க முழுக்க அது மரபியல் சார்ந்தது என்றும் மேரிலாந்து பல்கலைக்கழகம் கூறுகிறது.
2 நிற முட்டைகளுக்கும் இடையே ஊட்டச்சத்து அளவில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதுடன், இரண்டிலும் ஒரே அளவிலான புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளனவாம்.
முட்டையின் அளவைப் பொறுத்தே ஊட்டச்சத்து வேறுபடுகிறது. பெரிய முட்டையில் 90 கலோரி & 8 கிராம் புரதமும், சிறிய முட்டையில் 60 கலோரி & 6 கிராம் புரதமும் உள்ளதாக அமெரிக்க வேளாண்துறை தெரிவிக்கிறது.
சத்துக்களை போலவே சுவையிலும் இரு முட்டைகளுக்கும் இடையே வேறுபாடு கிடையாதாம். கோழி உட்கொள்ளும் உணவு, முட்டை எந்தளவுக்கு புதியது, சமைக்கும் முறை ஆகியவற்றை பொறுத்துதான் முட்டையின் சுவை வேறுபடுமாம்.
இரு முட்டைகளிலும் சத்துக்கள் ஒரே அளவு என்றாலும், பழுப்பு முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதற்கான காரணம், வெள்ளை ஓடு முட்டைகளை விட பழுப்பு ஓடு முட்டைகள் அதிகம் கிடைப்பதில்லை என்பதே ஆகும்.
எனவே முட்டையை வாங்கும் போது அதன் நிறத்தில் கவனம் செலுத்துவதை விட, முட்டையின் தரம், அளவு மற்றும் அது எந்தளவிற்கு புதியது என்பதை கவனித்து முட்டையை வாங்க வேண்டுமாம்.
Explore