பிள்ளையார் மிகவும் எளிமையான கடவுள். அவருடைய வழிபாடும் மிக எளிமையானது.
நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போடுவதும் பிள்ளையாரை வழிபடும்முறை.
அகத்தியர் கமண்டல நீர் கொட்டிய நிகழ்வும், கஜமுகாசுரனின் அசுர முகத்தை அழித்த நிகழ்வும் தோப்புக்கரண பின்னணியில் உள்ளன.
அறிவியலாக பார்த்தால், உடலில் குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்படுகிறது.
வலது காதுமடலின் கீழ்ப்பகுதியை இடதுகையாலும், இடது காதுமடலின் கீழ்ப்பகுதியை வலதுகையாலும் அழுத்திப்பிடித்து தோப்புக்கரணம் போடவேண்டும்.
இதனால் மூளையின் செயல்பாடு அதிகரித்து புதுவித சக்தியும் உற்சாகமும் கிடைக்கும். நாடி நரம்புகள் சுறுசுறுப்படையும்.
இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. படிப்பு, எழுத்து, கணிதம் போன்றவற்றில் கவனம் அதிகமாகும்.
காது மடல்களை ஒட்டிச் செல்லும் நரம்புகளை நாம் பிடித்து இழுப்பதால், ஞாபகசக்தி அதிகரிக்கும்.
Explore