மேலே அணியும் ஆடைகளை விட, உள்ளே அணியும் உள்ளாடைகள்தான் நம் உடலுடன் வெகுநேரம் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.
எனவே மேலாடையை விட உள்ளாடைகளுக்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அதனை ஒழுங்காக பராமரிப்பது உடல்நலத்திற்கும் நல்லது.
உள்ளாடைகளை மற்ற துணிகளுடன் சேர்த்து வாஷிங் மெஷினில் போடாமல், முடிந்தவரை தனியாக, கைகளில் துவைக்கலாம்.
கைகளில் துவைக்க முடியாதவர்கள், வாஷிங் மெஷினில் உள்ளாடைகளை போட்டு துவைப்பதற்கென்றே கிடைக்கும் உள்ளாடை பைகளை வாங்கி மெஷினில் பயன்படுத்தலாம்.
உள்ளாடைகளை டிடர்ஜென்ட் கொண்டு துவைக்காமல் மென்மையான சோப்பு கொண்டு துவைத்தால், உடலில் ஏற்படும் சில அலர்ஜிகளையும் தவிர்க்கலாம்.
தண்ணீர் குழாயை திறந்தவுடன் வரும் சற்று வெப்பமான நீரில் உள்ளாடைகளை அலசக்கூடாது. அவ்வாறு வெதுவெதுப்பான நீரில் அலசினால், உள்ளாடைகளின் ஸ்ட்ராப், எலாஸ்டிக், லேஸ் போன்றவை சீக்கிரம் போய்விடும்.
உள்ளாடைகளை துவைத்து காய வைக்கும்போது, அதனை கடினமாக பிழியக் கூடாது. அயர்ன் செய்யவும் கூடாது. இதனை பின்பற்றினால், உள்ளாடைகளின் எலாஸ்டிக், ஹூக் போன்றவை நீடித்து உழைக்கும்.
பேடட் பிரேஸியர் போன்றவற்றை மடித்து வைக்காமல், அவற்றின் வடிவத்தில் அப்படியே, கடைகளில் வைப்பதை போன்று வைக்க வேண்டும். அப்போதுதான் அதன் வடிவம் சிதையாமல் இருக்கும்.