கர்ப்பமாக இல்லாத பெண்களுக்கு மாதவிடாய் வராமல் இருப்பதற்கு அமினோரியா எனப் பெயர். இவ்வாறு பீரியட்ஸ் வராமல் தாமதமாவதற்கு 8 முக்கிய காரணங்களை கூறுகின்றனர் மருத்துவர்கள்.
முதல் முக்கிய காரணம் மனச்சோர்வு. இதனால் அட்ரினலின் ஹார்மோன் சுரப்பில் வேறுபாடு ஏற்பட்டு, பீரியட்ஸ் ஏற்படாமல் இருக்கும் அல்லது பீரியட்ஸின்போது தீவிர வலி ஏற்படுமாம்.
மாதவிடாய் தள்ளிப்போகும் 33% பெண்களுக்கு, பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் காரணமாக உள்ளது. PCOS பிரச்சனை கருப்பையின் செயல்பாட்டை பாதித்து, அதிலிருந்து கருமுட்டைகளை வெளியேற விடாமல் தடுக்குமாம்.
கருத்தடை மாத்திரைகள், ஊசிகள், கருப்பைக்குள் செலுத்தப்படும் கருத்தடை சாதனங்கள் போன்றவற்றால் பீரியட்ஸ் வராமல் இருக்கலாம்.
உடல் எடை அதிகரித்தால், பெண்ணின் இனப்பெருக்க அமைப்பை ஒழுங்குப்படுத்தும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகரித்து, மாதவிடாய் சுழற்சியை பாதிக்குமாம். இது, சில நேரங்களில் மாதவிடாயை முழுவதும் நிறுத்திவிடுமாம்.
உடலில் கலோரிகளின் அளவு அதிவேகமாக குறையும்போது, கருப்பையிலிருந்து முட்டைகள் வெளியேறுவதற்கான ஹார்மோன் உற்பத்தி நின்றுவிடுமாம். எனவே அதிவேகமாக உடல் எடை குறைந்தால் மருத்துவரை பார்க்க வேண்டும்.
அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடற்சோர்வு, மாதவிடாயை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை பாதித்து, பீரியட்ஸை தாமதப்படுத்துமாம்.
மெனோபாஸ் நிலையில் மாதவிடாய் நின்றுவிடும். பெண்களுக்கு, 45 முதல் 55 வயதுக்குள் மெனோபாஸ் ஏற்படுகிறது. 100ல் ஒரு பெண்ணுக்கு 40 வயதுக்கு முன்பே மெனோபாஸ் ஏற்படுகிறது. இதற்கு ப்ரீமெச்சூர் மெனோபாஸ் என்று பெயர்.
நீரிழிவு நோய், தைராய்டு பிரச்சனைகள், மனநோய் மருந்துகள், மன அழுத்தத்தை குணப்படுத்தும் மருந்துகள், பிபி மருந்துகள், அலர்ஜி மருந்துகள், கீமோ தெரபி உள்ளிட்டவையும் பீரியட்ஸை பாதிக்கும்.
Explore