நாய் கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடனடியாக சிகிச்சை அளிக்காவிடில் இது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
நாய் கடித்தால் தொற்று ஏற்பட்டு, காயம் வீங்கி சிவந்து அதிகமாக வலிக்கத் தொடங்கும். சிலருக்கு ரேபிஸ் போன்ற தீவிர நோயும் உண்டாகும்.
ஒருவேளை நாய் கடித்துவிட்டால், கடித்த இடத்தில் சோப் பயன்படுத்தி ஓடும் நீரில் குறைந்தது 10 முறையாவது நன்றாக கழுவ வேண்டும்.
அதிகமாக ரத்தப்போக்கு இருந்தால் காயத்தின் மீது நன்கு துணியை சுற்றி ரத்தம் வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காயத்துக்கு கட்டுப் போடுபவரும் அவரது கையை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக மருத்துமனைக்கு செல்ல வேண்டும். சிறிய காயமாக இருந்தாலும் கூட மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவது அவசியம்.
மருத்துவர்கள் தடுப்பூசி போட பரிந்துரைக்கலாம். கடித்தது, தெரு நாய் என்றால் ரேபிஸ் தடுப்பூசியை கட்டாயம் போட வேண்டும்.
விலங்குகள் கடிப்பது மட்டுமல்ல, ரத்தம் வருவதுபோல கீறி விட்டாலும் ஆபத்துதான். அதற்கும் மருத்துவமனை செல்ல வேண்டும்.
Explore