மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட சத்ரபதி சிவாஜியின் குல தெய்வமாக விநாயகர் வணங்கப்பட்டார்.
நாட்டுப்பற்றை வளர்க்க முற்பட்ட சிவாஜி, தெய்வ பக்தி & தேச பக்தியை ஒன்றிணைக்க, விநாயகர் சதுர்த்தியை மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் பண்டிகையாக மாற்றினார்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைக்க விநாயகர் சதுர்த்தியை பொது விழாவாக மாற்றினார் பால கங்காதர திலகர்.
மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை ஒன்று சேர்ந்து கொண்டாடியதால், தெய்வ பக்தியும் தேச பக்தியும் வளர்ந்தது.
அதேபோல், விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலமும் மக்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து ஒற்றுமையைக் காட்டும் நிகழ்வாக மாறியது.
மேலும், விநாயகர் சிலை கரைப்பு என்பது வாழ்க்கை சுழற்சியின் பிரதிபலிப்பாகவும், இயற்கையுடனான மனிதனின் உறவை வலியுறுத்தும் விதமாகவும் கருதப்படுகிறது.
களிமண் விநாயகர் சிலை நீரில் கரையும்போது, "உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை" என்பதும், பிறப்பு–இறப்பு–மறுபிறப்பு என்ற சுழற்சியும் நினைவூட்டப்படுகிறது.
சிலை நீரில் கரைந்த பின், அதன் மூலப்பொருளான களிமண் மீண்டும் பூமிக்கே கிடைத்துவிடுகிறது. அதிலிருந்து அடுத்த ஆண்டும் புதிய சிலைகள் உருவாக்கப்படுகின்றன.
Explore