பூமியின் வளிமண்டலம் முடியும் இடத்திலிருந்து விண்வெளி தொடங்குகிறது. காற்றியக்கவியல் சார்ந்த பறப்பது எங்கு சாத்தியமில்லாமல் போகிறதோ, அதுதான் விண்வெளி என்றும் சொல்லலாம்.
பூமியின் பரப்பிலிருந்து 100 கிமீ உயரத்தில் ‘கார்மான் கோடு’ என்ற எல்லை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கார்மான் எல்லையிலிருந்துதான் விண்வெளி தொடங்குவதாக, ஐ.நா மற்றும் உலக நாடுகள் ஏற்றுக்கொள்கின்றன.
ஆனால், பூமியின் பரப்பிலிருந்து 80 கிமீ உயரத்திலேயே விண்வெளி தொடங்குவதாக அமெரிக்கா நிர்ணயித்துள்ளது. கார்மான் எல்லைக்கு மேலிருக்கும் விண்வெளி எந்த நாட்டுக்கும் சொந்தமாகாத பொதுவான வெளி.
விண்வெளியில்தான் விண்மீன்கள், கோள்கள் உள்ளிட்டவை இருக்கும். விண்வெளிக்கு செல்வது ஜாலியாக இருக்கும் என்று நிறைய பேர் நினைப்போம். ஆனால் அந்த நினைப்பு தவறானது.
விண்வெளியில் புவி ஈர்ப்பு இல்லாததால், அங்கு செல்லும் வீரர்கள், பூமியில் இருப்பதுபோல சகஜமாக இருக்க முடியாது. இயல்பாக நடக்கக்கூட முடியாது. மிதக்கத்தான் முடியும்.
தூங்குவது முதல் ஒவ்வொரு வேலைகளையும் அவர்கள் செய்யும் விதம் வித்தியாசப்படும். உணவும், விண்வெளிக்கு ஏற்றார்போல்தான் சாப்பிட முடியும்.
விண்வெளியில் இரவு, பகல் வித்தியாசமெல்லாம் தெரியாது. விண்வெளியில் இருப்பவர்கள், ஒரே நாளில் சுமார் 16 சூரிய உதயங்களை பார்க்கலாம். 90 நிமிடங்களுக்கு ஒருமுறை என்ற ரீதியில் சூரிய உதயம் இருக்குமாம்.
Explore