உறவுகள் பலப்படும்
2025 ஜூலை 15-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் கல்வி சிறப்பாக இருக்கும். உயர் கல்வி, இளங்கலை உள்ளிட்ட கல்வி பயில்பவர்களுக்கு கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் விரும்பிய இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பிரிந்து போன உறவுகள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டு, உறவுகளால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கும். எதிர்பாராத நட்பு வட்டாரம் அமையும். உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் செயலாக்கம் பெறும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். பேச்சின் மூலம் வருமானம் அதிகரிக்கும். பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் நல்ல வருமானம், லாபம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு உண்டு, குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கடன்கள் கிடைப்பதில் சிரமங்கள் இருக்கும். ஒருவேளை கடன் கிடைத்தாலும், எதிர்பார்த்த காரியங்கள் முழுமையடையாது. தொழில் வாழ்க்கை சாதாரணமாக இருக்கும், எனவே வேலையில் கவனம் செலுத்துங்கள். எதிர்பாராத நட்பு வாழ்க்கையில் அமையலாம் அல்லது ஏற்கனவே உள்ள நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். மூத்த சகோதர சகோதரிகளால் மகிழ்ச்சி ஏற்படும். முருகப் பெருமானையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.