புதிய காதல் மலரும்

Update:2025-08-19 00:00 IST

2025 ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசியில் குருவின் நட்சத்திரத்தில் இருப்பதால், இதுவரை கைக்கு வராமல் இருந்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு வாய்ப்புகள் வரும். நகை வாங்க, விலை உயர்ந்த ஆடைகள் வாங்க நினைத்தவர்களுக்கு இந்த வாரம் அதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு தகுந்த நல்ல வருமானம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, போனஸ் போன்ற பண பலன்களை எதிர்பார்த்தவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் உண்டு. இதுவரை கடன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு, இந்த வாரம் விண்ணப்பித்தால் கடன் கிடைக்கும். குறிப்பாக, நீங்கள் எந்த நோக்கத்திற்காக கடன் வாங்குகிறீர்களோ அந்த நோக்கம் நிறைவேறும். வழக்குகள், சச்சரவுகளில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. திறமையான பெண் பணியாளர்களை எதிர்பார்த்தவர்களுக்கு இந்த வாரம் அவர்கள் கிடைப்பார்கள். போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வாய்ப்பு அதிகம். இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். புதிய காதல் மலர வாய்ப்புகள் உண்டு. முருகனையும், விநாயகரையும் வழிபடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்

பண வரவு