உடல் ஆரோக்கியத்தில் கவனம்
2025 மே 27-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களுடைய வேலையில் கவனம் செலுத்துங்கள். எந்தளவுக்கு வேலையில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்துகிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உங்களது முயற்சிகளுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். 6-ம் இடத்தில் புதன் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை; நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. கடன் உள்ளவர்கள் நோய் குறித்து கவலைப்பட வேண்டாம், சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இந்த வாரம் அறுவை சிகிச்சை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அரசாங்கத்தால் தேவையற்ற பிரச்சனைகள் வரலாம்; யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம், திரும்பப் பெறுவது கடினம். குருவின் பார்வை இருப்பதால் எந்த பிரச்சனைகளையும் சமாளித்துவிடுவீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்; எண்ணங்கள் ஈடேறும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். இறைவன் துணை நிற்பார். நீண்ட தூர பயணங்களால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.உறவுகளால் மகிழ்ச்சியும், பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. கடன் வாங்கி இடம், வீடு வாங்க அல்லது கட்ட வாய்ப்புகள் உள்ளன. வியாபாரம் சுமாராக இருக்கும். இந்த வாரம் சிவனையும் மகாவிஷ்ணுவையும் தரிசனம் செய்வது நல்லது.