குழப்பம் வேண்டாம்
2025 மே 20-ஆம் தேதி முதல் 2025 மே 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கடன் குறைவதற்கான வாய்ப்பு குறைவு. கடனால் தேவையற்ற மன வருத்தங்கள், பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் இருக்கும். பொறுமையாக இருங்கள். பெரிய அளவில் நோய் இருந்தால் அதன் தன்மை கூடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வருமானங்கள் இருக்கும். ஆனால் செலவுகள் அதைவிட அதிகமாக இருக்கும். இந்த வாரத்தில் வேலையில் நீங்கள் பெரிய அளவில் முயற்சி செய்தால் மட்டுமே உங்கள் தொழிலில் பெரிய அளவில் வெற்றி பெற முடியும். நினைத்த காரியங்களை செய்யுங்கள். அது உங்களுக்கு நன்மையை தரும். யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்கு உதவியாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். வீடு, இடம் மாற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மாற்றங்கள் உண்டு. சொத்துக்கள் நல்ல விலைக்குப் போகும் அல்லது பேச்சுவார்த்தைகள், அட்வான்ஸ் அக்ரிமெண்ட் போடுவதற்கான சூழ்நிலைகள் இருக்கும். ஒரு பக்கம் உறவுகளால் உங்களுக்குத் தேவையற்ற பிரச்சினைகள், இன்னொரு பக்கம் அவர்களால் நன்மைகள் என இரண்டும் கலந்து இந்த வாரம் இருக்கும். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு விற்பனை இருக்கும். விவசாயத்தில் இருந்தால், ஓரளவுக்கு மகசூல், லாபம் உண்டு. இந்த வாரத்தில் சிவ தரிசனம் செய்யுங்கள். உங்களுடைய இஷ்ட தெய்வம் எதுவோ, அதை நன்றாக வழிபாடு செய்யுங்கள்.