அந்தஸ்து உயரும்
2025 செப்டம்பர் 09-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பத்தாம் இடத்தில் சூரியன், புதனுடன் இருப்பதால், உங்கள் அந்தஸ்தும், புகழும் கூடும். வருமானங்கள் நிறைய இருக்கும். அதே சமயம் செலவுகளும் அதிகமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். உங்கள் வாழ்க்கை இலக்குகளை அடைய இந்த வாரம் திட்டமிடுங்கள். அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் முயற்சி ஸ்தானத்தை குருவும், சனியும் பார்ப்பதால், உறவுகளால் நன்மையும், மனவருத்தங்களும் இரண்டும் உண்டு. இந்த வாரம் அமைதியாகச் செயல்படுவது நல்லது. உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க, இறைவன் யாரையாவது அனுப்புவார். வீடு, இடம், ஊர் மாற நினைத்தவர்களுக்கு மாற்றங்கள் உண்டு. உங்கள் சொத்துக்கள் விற்பனையாகாமல் இருந்தால், இந்த வாரம் விற்பனையாவதற்கான வாய்ப்புகள் உண்டு. வீட்டுக்கு நல்ல வாடகைதாரர்கள் அமைவார்கள். நல்ல வேலையாட்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, அவர்கள் கிடைப்பார்கள். தொழிலில் முதலீடுகள் மட்டுமே இருக்கும், நல்ல லாபம் இருக்காது. எனவே, பெரிய முதலீடுகள் வேண்டாம். வழக்கமான தொழிலை மட்டும் செய்யுங்கள். கணவன் அல்லது மனைவிக்கு தேவையற்ற செலவுகள் அல்லது மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள் படிக்கலாம். பல புதிய தொடர்புகள் உண்டாகும். உங்கள் எட்டாம் இடத்தை சனி பார்ப்பதால், அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை. எதிர்பாராத பண வரவு அல்லது முன்னோர்களின் சொத்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் பைரவர் மற்றும் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.