உறவுகளால் மகிழ்ச்சி
2025 ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் வேலை வாய்ப்புகள் நன்றாக இருக்கும். வேலை மாற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை செய்ய முயற்சிப்பவர்களுக்கும் நல்ல பலன்கள் உண்டு. உங்கள் 12-ம் வீட்டை செவ்வாய் மற்றும் சனி பார்ப்பதால், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்யலாம். ஆராய்ச்சி மற்றும் கல்விக்கு இது ஒரு நல்ல வாரம். முயற்சி ஸ்தானத்தை குரு, சுக்கிரன் மற்றும் சனி பார்ப்பதால், நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை அடைய முடியும். சோம்பேறித்தனத்தை தவிர்த்து சுறுசுறுப்பாக செயல்படுங்கள். கடவுளின் அருளும் உங்களுக்கு துணை நிற்கும். சிறு தொழில், சுயதொழில், ஆன்லைன் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும், பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு உண்டு. உங்கள் முயற்சிகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். அதே நேரத்தில், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். இந்த வாரம் முருகப்பெருமானையும் விநாயகரையும் வழிபடுவது நலம்.