புதிய முயற்சிகள் வெற்றிபெறும்
2025 ஜூலை 29-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் இயற்கையாகவே தெய்வ அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத தெய்வ தரிசனங்கள், ஆலய தரிசனங்கள் ஏற்படலாம். தந்தையின் அன்பு, ஆதரவு கிடைக்கும். உயர்கல்வி பெற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. பாஸ்போர்ட், விசா தாமதமாகி இருந்தால் கிடைக்க வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலைமைகள் ஓரளவு நன்றாக இருக்கும். வருமானமும், செலவும் சமமாக இருந்தாலும், ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாக இருக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உங்களை மேம்படுத்திக்கொள்ளவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் ஏற்ற வாரமாக இருக்கும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள். உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக மாறும். உறவுகளால் நன்மையும், பகை குறைவதற்கான வாய்ப்பும் உண்டு. சிறுதொழில், சுயதொழில், வீட்டிலிருந்து செய்யும் தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு நன்றாக இருக்கும். உற்பத்தி சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு நல்ல விற்பனையும், லாபமும், பணப்புழக்கமும் இருக்கும். சொந்தமாக இடம், வீடு, வாகனம், தோட்டம் போன்றவை வாங்க நினைப்பவர்களுக்கு இந்த வாரம் வாய்ப்புகள் அதிகம். கேட்ட இடத்தில் கடன் கிடைத்தாலும், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். கண்டறியப்படாத நோய்கள் வந்து விலகும். சனி பகவானையும், நரசிம்மரையும் வழிபடுவது நல்லது.