அந்தஸ்து, புகழ் உயரும்
2025 செப்டம்பர் 02-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் குருவுடன் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். எதிர்பாராத கோவில் தரிசனங்கள் நடக்கும். உயர்கல்வி நன்றாக இருக்கும். இரண்டாவது திருமணம் முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சிறப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள பணம் கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்களுக்கான வாய்ப்புகள் உண்டு. தந்தையின் அன்பு மற்றும் ஆதரவு கிடைக்கும். பத்தாம் இடத்தில் சூரியன் புதன் இருப்பதால் உங்கள் அந்தஸ்து, புகழ் மற்றும் கௌரவம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு மற்றும் அரசாங்கத்தால் நன்மைகள் ஏற்படும். அந்நிய மொழி பேசுபவர்களின் நட்பு இந்த வாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலைமை சுமார் தான். வருமானத்திற்கு சமமாக செலவுகள் இருக்கும். நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். நம்பியவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள். சிறுதொழில் அல்லது சுயதொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் உண்டு. வீடு அல்லது இடம் மாற்றும் வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் முருகன் மற்றும் மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.