சுறுசுறுப்பு அவசியம்

Update:2025-09-23 00:00 IST

2025 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் வருமானம் அதிகரிக்கும். தொழில் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். முயற்சி ஸ்தானத்தில் குரு மற்றும் சனியின் பார்வை இருப்பதால், நீங்கள் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். சோம்பேறித்தனத்தைத் தவிர்த்து சுறுசுறுப்பாக செயல்படுவது அவசியம். உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். உறவுகளால் நன்மை, உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். ஐந்தாம் இடத்தில் ராகு இருப்பதால் கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புகழ், அந்தஸ்து, வருமானம் கூடும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள் கிடைக்கும். இருந்தும் பங்குச்சந்தை, பந்தயம், லாட்டரி போன்றவற்றில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வேலைவாய்ப்பில் மாற்றங்கள் ஏற்படலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வேலையில் சில போராட்டங்கள் இருந்தாலும், எதிர்காலத்தில் நல்ல முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். இதனால் வேலை மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். இந்த வாரம் நீங்கள் சிவன் மற்றும் பெருமாளை வழிபடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்