முன்னேற்றம் உண்டு
2025 ஜூலை 01-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் எட்டாம் இடத்தில் இருப்பதும், சனி பகவான் எட்டாம் இடத்தைப் பார்ப்பதும் பொறுமையையும் நிதானத்தையும் கோருகிறது. கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும், பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. பணப்புழக்கம் இருக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும், லாபம் வந்தாலும் கைக்கு வருவதில் தடை இருக்கலாம். திருமண வாழ்க்கை பரவாயில்லை. அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் செய்யலாம். முயற்சிகள் ஓரளவு வெற்றியடையும். எதிர்பாராத பயணங்கள் நன்மையைத் தரும். உங்களை மேம்படுத்திக்கொள்ளவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல விற்பனை மற்றும் லாபம் கிடைக்கும். வேலைவாய்ப்புகளில் முன்னேற்றம் இருந்தாலும், அதற்காக நீங்கள் பெரிய விலை கொடுக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் வருமானம் இருந்தாலும், தடைகளும் இருக்கும். முதலீடு செய்ய வசதி இருந்தால் செய்யலாம். வெளிநாட்டினர் அல்லது அன்னிய மொழி பேசும் நண்பர்களால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சி மற்றும் பி.எச்.டி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தெய்வ அனுகூலம் உண்டு. மகாலட்சுமியை வழிபடவும்.