பிரிந்த உறவுகள் சேரும்
2025 மே 06-ஆம் தேதி முதல் 2025 மே 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சிறியது, பெரியது என்று உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் இதுவரை ஏமாந்த நிகழ்வுகள் எல்லாம் மாறி, நினைத்த அத்தனையும் நடக்கும். உங்களின் விருப்பம், எண்ணம், ஆசை, அபிலாஷைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் நட்பு விரிவடையும். நட்பால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, முன்னேற்றம் இருக்கும். மூத்த சகோதர - சகோதரிகளாலும் நன்மைகள் உண்டு. பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து, வருமானங்கள் உண்டு. ரேஸ், லாட்டரி, ஆன்லைன் பிசினஸ், டிரேடிங் ஆகியவற்றில் சுமாரான முதலீடே செய்யுங்கள். எல்லாமே லாபத்தை கொடுப்பது மாதிரியான தோற்றம். ஆனால், அடக்கி வாசியுங்கள். கிரக நிலைகளும் சரியில்லாததால் விட்டதை பிடிக்க ஆசைப்படாதீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத தெய்வ தரிசனம் உண்டு. கடன் இருந்தால் குறையும். நோய் இருந்தால் விடுபடுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், அவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவை உண்டு. தொழில் பரவாயில்லை. இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் சிவனை வழிபாடு செய்யுங்கள்.