முதலீட்டில் கவனம்
2025 மே 20-ஆம் தேதி முதல் 2025 மே 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வருமானமும், சம்பாத்தியமும் சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றிபெறும். எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். அவர்களால் நன்மைகள், முன்னேற்றமும் ஏற்படும். மூத்த சகோதர-சகோதரிகள் இருந்தால், அவர்களாலும் உங்களுக்கு நன்மைகள் உண்டு. பெரிய அளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். ஏனென்றால் பெரிய லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். ஆனால், வருமானம் சுமாராகத்தான் இருக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். வேலைவாய்ப்புகள் நன்றாக இருக்கும். இடமாற்றம் அல்லது வேறு வேலை தேடுபவர்களுக்கு மாற்றங்கள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். தொழிலில் சற்று அடக்கி வாசிக்கவும். சிறு தொழில் செய்பவர்கள் அல்லது பெரிய அளவில் வியாபாரத்தை ஸ்தாபிக்க நினைப்பவர்கள் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். எல்லாமே லாபத்தை கொடுப்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தாலும், அது சுமாராகத்தான் இருக்கும். உங்கள் அந்தஸ்து, கௌரவம், புகழ் கூடும். எதிர்பாராத தன வரவு உண்டு. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் பேசாதீர்கள். இந்த வாரம் சிவன் கோவிலுக்கு சென்று சிவனை தரிசனம் செய்யுங்கள். குறிப்பாக மகா கணபதியை நன்றாக வழிபட்டு வாருங்கள்.