முயற்சிகள் சுமார்

Update:2025-06-03 00:00 IST

2025 ஜூன் 03-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

முதலீடுகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. பண வசதி இல்லாதவர்களுக்கு கடன் அல்லது லோன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால், தயங்காமல் முயற்சி செய்யலாம். இந்த வாரம் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் சுமாரான வெற்றியைத் தரும். எதிர்பாராத பயணங்கள் மகிழ்ச்சியை அளிக்கும். குறிப்பாக, ஜூன் 7-ம் தேதிக்குப் பிறகு வீடு, நிலம், வாகனம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். விவசாயம் சார்ந்த துறைகளில் உள்ளவர்கள் ஓரளவுக்கு லாபம் ஈட்டலாம். உற்பத்தி சார்ந்த துறையில் உள்ளவர்களுக்கு விற்பனை இருந்தாலும் லாபம் குறைவாக இருக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகள் மற்றும் யூக வணிகங்கள் லாபம் தருவது போல தோன்றினாலும், பணம் கைக்கு வருவதில் தடைகள் இருக்கும். இந்த வாரத்தில் உங்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி இருக்காது. குறிப்பாக 7-ம் தேதிக்குப் பிறகு திருப்தியற்ற மனநிலை இருக்கும். வேலை வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். வேலையில் ஒரு திருப்தியற்ற சூழ்நிலையை உணர்வீர்கள். வேலை அல்லது தொழில் எதுவாக இருந்தாலும் பொறுமையுடன் இருங்கள். தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த வாரம் பெருமாளையும், சிவன் கோயிலில் உள்ள பைரவரையும் வழிபடுவது நன்மை பயக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்