கல்வி சிறக்கும்
By : ராணி
Update:2023-12-19 00:00 IST
2023, டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தேவை இருந்தால் மட்டும் கடன் வாங்கவும். வேலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீடு, இடம் மாற நினைக்கும் ஒருசிலருக்கு அதற்கான வாய்ப்புண்டு. உற்பத்திக்கு ஏற்ற விற்பனை உண்டு. விவசாயம், கல்வி சிறப்பாக இருக்கும். அம்மாவின் அன்பும், ஆதரவும் பரிபூரணமாக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் பார்ட்னர் லாபமடைவார். பெரிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வாய்ப்பு உண்டு. அந்நிய மொழி பேசும் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரிகளால் நற்பலன்கள் உண்டு. சிவன், மகாலட்சுமி வழிபாடு செய்ய நற்பலன்கள் கிடைக்கும்.