உறவுகளை பிரிவீர்கள்

Update:2024-07-02 00:00 IST

2024 ஜூலை 02-ஆம் தேதி முதல் ஜூலை 08-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பேச்சின் மூலம் வருமானத்தை சம்பாதிப்பீர்கள். உங்கள் கையில் பணம், தனம், பொருள், பேங்க் பேலன்ஸ் ஓரளவுக்கு இருக்கும். ஆனால், எவ்வளவு வருமானங்கள் வந்தாலும், ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு செலவினங்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஷேர் மார்க்கெட், டிரேடிங், டிஜிட்டல் கரன்சி, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குறிப்பாக வேலை நிமித்தமாக இருக்கும் அந்த பயணம் நன்மையில் முடியும். நெருங்கிய உறவுகளை பிரிந்து இருப்பீர்கள். இளைய சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம், பாப்புலாரிட்டி இருக்கிறது. அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும். வேலையை பொறுத்தவரை தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. ஏதாவது ஒரு வேலை, வருமானம், எதிர்பார்க்கக்கூடிய முன்னேற்றங்கள் இருப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு. தொழில் பரவாயில்லை. நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கும் பரவாயில்லை. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. எது எப்படி இருந்தாலும் முதலீடு செய்ய வேண்டாம். நட்பு வட்டத்தை சரியாக மெயின்டெய்ன் செய்யுங்கள். அவர்கள் உங்களை விட்டு பிரிந்துபோவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாரம் முழுவதும் முருகன் மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்

பண வரவு