பிரயாணங்களில் ஜாக்கிரதை

தொடங்கும் வேலைகள் நினைத்ததுபோல் நடக்காமல்போக வாய்ப்புகள் உள்ளது.;

Update:2023-08-22 00:00 IST

2023, ஆகஸ்ட் 22 முதல் 28 - வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் அபாயகரமான வாரமாகவே இருக்கும். நினைத்ததுபோல் காரியங்கள் நடக்காது என்பதால் மனதளவில் தைரியப்படுத்திக் கொள்வது நல்லது. வேலைகளை தள்ளிப்போடுவதால் வீடு மற்றும் பணியிடத்தில் பிரச்சினைகள் வரலாம். வீண் செலவுகள் சற்று குறைவாக இருக்கும். தொடங்கும் வேலைகள் நினைத்ததுபோல் நடக்காமல்போக வாய்ப்புகள் உள்ளது. பிரயாணங்களிலும் ஜாக்கிரதையாக இருங்கள். பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுடன் உறவு நன்றாக இருக்கும். எண்ணங்களை பாசிட்டிவாக வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு சனி, மகா விஷ்ணு, மகா லட்சுமி மற்றும் சந்திர பகவானுக்கு விளக்கேற்றி நாளைத் தொடங்குங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்