உறவுகளால் பிரச்சினை
2025 மே 13-ஆம் தேதி முதல் 2025 மே 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் அந்தஸ்து, புகழ் கூடும். புதிய காதல் மலரும். பெரிய அளவில் வியாபாரம் செய்ய நினைப்பவர்கள் தாராளமாக முயற்சி செய்யலாம். பத்தாம் இடத்தில் குரு வருவதால், பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். முயற்சிகள் ஓரளவு வெற்றியடையும். உறவுகளால் தேவையற்ற மன வருத்தங்களும், பிரச்சினைகளும் ஏற்படலாம். நெருங்கிய உறவுகள் உங்களை விட்டுப் பிரியவும் வாய்ப்புள்ளது. கலைத்துறையில் இருந்தால், புகழ், அந்தஸ்து, வருமானம் ஆகியவை கிடைக்கும். இந்த வாரத்தில் உங்களுடைய உழைப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கும், உங்களுக்குப் பெரிய பிரயோஜனம் இருக்காது. வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை, உங்களுக்கு வேலை இருந்துகொண்டே இருக்கும். உடன் பணியாற்றுபவர்களின் உதவி கிடைக்கும். நட்பை நன்றாகப் சரியான முறையில் மெயின்டைன் செய்யுங்கள். இது மிகவும் முக்கியம். குறிப்பாக, உங்கள் ஆண் நண்பர்களால் தேவையற்ற மன வருத்தங்கள், பிரச்சினைகள், போராட்டங்கள் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல், உங்களுக்கு மூத்த சகோதரர் இருந்தாலும் அவர்களாலும் பிரச்சினைகள் வரலாம். இந்த வாரம் சிவபெருமானையும், மகாலட்சுமியையும் வழிபாடு செய்யுங்கள்.