உறவுகளால் சிக்கல்
2025 செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் ராசிநாதன் புதன் 11-ஆம் இடத்தில் இருப்பதால் உங்கள் ஆசைகள், சிந்தனைகள் அனைத்தும் நிறைவேறும். ஆனால் அதற்கு நீங்கள் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வருமானம் நன்றாக இருந்தாலும், செலவுகளும் அதிகமாக இருக்கும். குறிப்பாக, மனைவியாலோ அல்லது பெண்களுக்காகவோ செலவு செய்ய நேரிடும். இந்த வாரம் அதிக முயற்சி எடுக்காமல் இருப்பது நல்லது, ஏனெனில் பலன் பெரிதாக கிடைக்காது. வண்டி வாகனங்களில் கவனமாக இருங்கள். உறவுகளால் மன வருத்தங்களும், பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் பெரிய முன்னேற்றம் இருப்பது போல் தோன்றினாலும், சிக்கல்கள் இருக்கலாம். ஆவணங்களில் கவனம் தேவை. விவசாயத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். காதல் முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்க அல்லது தொழிலை விரிவுபடுத்த, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இது நல்ல வாரமாக அமையும். வேலையில் எதிர்பாராத முன்னேற்றங்கள், பதவி உயர்வு போன்றவை உண்டு. இந்த வாரம் நீங்கள் துர்க்கையையும், மகாலட்சுமியையும் வழிபடுவது நல்லது.