விருப்பங்கள் நிறைவேறும்

Update:2025-08-26 00:00 IST

2025 ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதால், உங்கள் விருப்பங்கள் மற்றும் ஆசைகள் பூர்த்தியாகும். ஏழாம் வீட்டில் வக்ர கதி சனியால் புதிய காதல் உறவுகள் உருவாகும். தொழில் முனைவோராக மாற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எடுக்கக் கூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். அரசாங்கத்தால் ஆக வேண்டிய காரியங்கள் நடக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும். நான்காம் வீட்டை குரு, சுக்கிரன் மற்றும் சனி பார்ப்பதால், அசையா சொத்துக்களை வாங்க வாய்ப்புகள் உருவாகும். கல்வி சிறப்பாக இருப்பதுடன், விவசாயத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தாயின் அன்பு மற்றும் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பொழுதுபோக்கு நிகழ்வுகள் மகிழ்ச்சி தராது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல வாரம். பாஸ்போர்ட், விசா போன்றவற்றிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். இந்த வாரம் தந்தையின் ஆதரவு கிடைக்கும். துர்கையையும் விநாயகரையும் வழிபடுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்