வெற்றி வாய்ப்புகள்

Update:2025-07-29 00:00 IST

2025 ஜூலை 29-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் வியாபாரம் நன்றாக இருக்கும். பெரிய அளவில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஆடி மாதமாக இருந்தாலும், தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. பொருளாதார நிலைமைகள் நன்றாக இருக்கும். வருமானமும் நன்றாகவே இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் இந்த வாரம் வெற்றி பெறும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். வாழ்க்கையில் உங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். சொத்துக்கள் விற்காமல் இருந்தால், இந்த வாரம் விற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உறவுகளால் மகிழ்ச்சியும், நன்மையும் உண்டாகும். வேலைவாய்ப்புகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சம்பளம், பதவி உயர்வு போன்றவற்றை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு அவை கிடைக்கும். உங்கள் ஆரோக்கியத்திலும், தாயாரின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். அனைத்து விஷயங்களிலும் ஒரு திருப்தியற்ற மனநிலை ஏற்படலாம், அதைத் தவிர்க்கவும். கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், வெளிச்சம் கிடைக்கும், ஆனால் வருமானம் சுமார். அரசியலில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் உண்டு. பொது உறவுகள் நன்றாக இருக்கும். இந்த வாரம் விநாயகரையும், துர்க்கையையும், காளியையும் வழிபடுவது அவசியம்.

Tags:    

மேலும் செய்திகள்