நண்பர்கள் ஆதரவு

Update:2025-07-15 00:00 IST

2025 ஜூலை 15-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் நண்பர்களால் உங்கள் வாழ்க்கையில் ஏற்றம், முன்னேற்றம், மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். வாழ்க்கையில் சிறிய ஆசைகள் முதல் பெரிய ஆசைகள் வரை நிறைவேறாமல் இருந்தால், இந்த வாரம் அவை பூர்த்தியடையும் வாய்ப்பு உண்டு. இந்த வாரம் காதல் உறவுகள் மலர வாய்ப்புள்ளது. ஒருபுறம் காதல் வெற்றிபெறுவது போலத் தோன்றினாலும், அதில் நிறைய போராட்டங்களும் பிரச்சனைகளும் ஏற்படலாம். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கும், இரண்டாம் திருமணம் எதிர்பார்த்தவர்களுக்கும் பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு. புதிய காரியங்களில் பெரிய அளவில் வெற்றி இருக்காது, எனவே கவனமாகச் செயல்படுங்கள். உறவுகளால் தேவையற்ற பிரச்சனைகள் அல்லது மன வருத்தங்கள் ஏற்படலாம். கல்வியை பொறுத்தவரை இளங்கலை மற்றும் உயர் கல்வி இரண்டுமே சிறப்பாக இருக்கும். உற்பத்தித் துறைகளில் உள்ளவர்களுக்கு உற்பத்திக்கு ஏற்ப நல்ல விற்பனை, லாபம் கிடைக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் சூழ்நிலைகள் உண்டு. வேலையைப் பொறுத்தவரை, உங்களின் சேவைக்குரிய சனி ஏழில் இருப்பதால், சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மேலதிகாரிகளும், சக ஊழியர்களும் நல்ல ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் வேண்டாம், வியாபாரம் சாதாரணமாக இருக்கும், நஷ்டம் ஏற்பட வாய்ப்பு குறைவு. விநாயகரையும் முருகப் பெருமானையும் வழிபடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்