ஆசைகள் பூர்த்தியாகும்
2025 செப்டம்பர் 02-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் அந்தஸ்து, புகழ், வருமானம் அனைத்தும் அதிகரிக்கும். உங்கள் எண்ணங்களும், ஆசைகளும் பூர்த்தியாகும். ஏனெனில் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் இத்தகைய நிகழ்வுகள் நடந்தேறும். மேலும் நண்பர்களால் மகிழ்ச்சியும், ஆதரவும் கிடைக்கும். புதிய தொழில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. புதிய காதல் உறவுகளும் சாதி, மதம் கடந்த தொடர்புகளும் ஏற்படும். இரண்டாவது திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு இது நல்ல வாரம். உயர்கல்வி நன்றாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் உண்டு. ஆனால், பங்குச்சந்தை, ட்ரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் கொஞ்சம் நிதானமாக இருக்கவும். அவசரப்பட்டு முதலீடு செய்ய வேண்டாம். வேலையைப் பொறுத்தவரை சுமாராகவே இருக்கிறது. மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருக்கும். சக ஊழியர்களும் கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு பெரிய அளவில் உதவ மாட்டார்கள். இந்த வாரம் சுமாரான பலன்கள் இருந்தாலும், வண்டி வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் பைரவரையும் மகாலட்சுமியையும் வழிபடுவது நல்லது.