நேர்மையே பலம்
2025 ஆகஸ்ட் 05-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் தொழில் வழக்கம் போல் இருக்கும். தொழில் தகராறுகள் அல்லது நிச்சயமற்ற நிலை இருக்கலாம், ஆனால் தொழில் இல்லாமல் இருக்காது. நிதி நிலைமை ஓரளவுக்கு பரவாயில்லை, பணப்புழக்கம் உண்டு. புதிய காரியங்களில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களும் கை கூடும். உறவுகளால் சிறிய பிரச்சனைகள் இருந்தாலும் நன்மைகள் உண்டாகும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள். யாரை தொடர்பு கொள்ள விரும்புகிறீர்களோ, அவர்களை நேரடியாக நீங்களே தொடர்பு கொள்ளுங்கள். இடைத்தரகர்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத பயணங்கள் மற்றும் அதனால் முன்னேற்றம் ஏற்படலாம். கல்வி நிலை பரவாயில்லை. வேலை நன்றாக இருந்தாலும், அதில் பல பிரச்சனைகள் இருக்கும். நான்காம் இடத்தை குரு சனி பார்ப்பதால், வேலையில் திருப்தியின்மை ஏற்படும். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், சொல்ல முடியாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் வழக்கம் போல் இருக்கும். உயர்கல்வி படிக்க விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. பாஸ்போர்ட், விசா எதிர்பார்த்தவர்களுக்கு கிடைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்புகள் உருவாக வாய்ப்பு உண்டு. உங்கள் விருப்பங்களும் ஆசைகளும் பூர்த்தி அடையும். நரசிம்மர் மற்றும் கிருஷ்ணரை வழிபடுவது நல்லது.