கவனம் தேவை
2025 செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் 2025 அக்டோபேர் 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் பேச்சின் மூலமாகவோ அல்லது உழைப்பின் மூலமாகவோ வருமானம் வந்தாலும், அதே அளவிற்கு செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் பெரிய அளவில் பலன் அளிக்காது. உறவினர்களால் மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே பயணம் செல்லுங்கள். பொதுவாக, இந்த வாரம் நீங்கள் எல்லாவற்றிலும் கவனமாகவும், சிந்தித்தும் செயல்பட வேண்டும். நீண்ட நாட்களாக விற்பனையாகாத சொத்துக்கள் இந்த வாரம் விற்பனையாக வாய்ப்புள்ளது. உங்கள் தாயாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். விவசாயத் துறையில் இருப்பவர்களுக்கும், உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கும் இந்த வாரம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். கல்வி நிலை சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் இருந்தாலும், செலவுகள் அதிகமாகவே இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, இந்த வாரம் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய தொழில்கள் அல்லது நிறுவனங்கள் தொடங்குவதற்கு இந்த வாரம் நல்ல வாய்ப்பு. வேலைவாய்ப்பில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு அது கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். குறிப்பாக, பெண்களால் செலவுகள் ஏற்படலாம். பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு, வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கலாம். இரண்டாம் திருமணம் முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் மகாலட்சுமி மற்றும் விநாயகரை வழிபடுவது நல்லது.