உறவுகளிடம் கவனம்

Update:2025-06-17 00:00 IST

2025 ஜூன் 17-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் அந்தஸ்து, புகழ் கூடும். ராசிநாதன் புதன் பத்தாம் இடத்தில் இருப்பதால், உங்கள் புகழ் அதிகரிக்கும். ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி படிப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணப்புழக்கம் பரவாயில்லை என்றாலும், செலவுகள் அதிகமாக இருக்கும். பெரிய முயற்சிகளைத் தவிர்த்து, அன்றாட வழக்கத்தைப் பின்பற்றுங்கள். புதிய முயற்சிகள் லாபம் தருவது போல் தோன்றினாலும், தடைகளும் பிரச்சனைகளும் இருக்கும். தேவையற்ற மனக்குழப்பங்கள், சிந்தனைகளைத் தவிர்க்கவும். உறவுகளில் கவனமாக இருங்கள், பிரிவுகள் ஏற்படலாம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல விற்பனையும் லாபமும் இருக்கும். கல்வி நன்றாக இருக்கும். தாயின் அன்பு மற்றும் ஆதரவை எதிர்பார்த்தவர்களுக்கு இந்த வாரம் கிடைக்கும். வேலையில் பெரிய பிரச்சனைகள் இல்லை, நீங்கள் பிரச்சனைகளை உருவாக்காமல் இருந்தால் போதும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ், போனஸ் போன்றவற்றை எதிர்பார்த்தால், விதிப்படி என்ன கிடைக்குமோ அது கிடைக்கும். கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வழக்குகள் அல்லது பிரச்சனைகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த வாரம் விநாயகரையும், முருகப்பெருமானையும் வழிபடுவது நன்மை பயக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்

கவனம் தேவை