ஹோட்டல் ஸ்டைலில் மட்டன் கோலா உருண்டை!

மட்டன் கோலா உருண்டை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒரு டிஷ் அது.;

Update:2025-05-13 00:00 IST
Click the Play button to listen to article

மட்டன் கோலா உருண்டை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒரு டிஷ் அது. இதனை கடைகளில் வாங்குவதை விட, நம் கையாலேயே வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அது இன்னும் ஸ்பெஷல்தானே! அப்படிப்பட்ட சுவை மிகுந்த மட்டன் கோலா உருண்டையை சுவையாக செய்வது எப்படி என்பதை நமக்கு செய்து காட்டுகிறார் ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் தியாகு.


மட்டன் கோலா உருண்டை செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து கடாய் சூடானதும் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து லேசாக வதக்கவும்.

இதனுடன் அரைத்து வைத்துள்ள மட்டனையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். கறி அதிக நேரம் அடுப்பில் இருந்தால் ரப்பர் போலாகிவிடும். ஆகவே, கறி வெந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.

வதக்கிய கலவையை சூடு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மிகவும் நைசாக அரைக்க வேண்டாம்.


கோலா உருண்டைக்கான மசாலா பொருட்களை தயார் செய்தல் 

அரைத்த மசாலாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, கறி நன்றாக ஒன்று சேரும்வரை நன்கு பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த கறியை உங்களுக்கு விருப்பமான அளவில் சிறிய உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காய வைக்கவும். எண்ணெய் அதிக சூடாக இருந்தால் உருண்டைகள் சீக்கிரம் கருகிவிடும், உள்ளே வேகாது.

எண்ணெய் காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள உருண்டைகளை மெதுவாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேகும்வரை பொரிக்கவும். எல்லா பக்கமும் நன்றாக வேக வேண்டும்.


கொத்துக்கறியுடன் மசாலா பொருட்கள் சேர்த்து பிடிக்கப்பட்ட உருண்டைகள்  

உருண்டைகள் பொன்னிறமாக வெந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.

சுவையான மட்டன் கோலா உருண்டைகளை கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும். இந்த சுவையான கோலா உருண்டையை சாதத்துடன் சைட் டிஷ்ஷாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம். இது குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


மட்டன் கோலா உருண்டையை எண்ணெயில் பொரித்தெடுக்கும் முறை 

மட்டன் கோலா உருண்டையின் நன்மைகள்

* ஆட்டுக்கறியில் புரதம் (புரோட்டீன்) அதிக அளவில் உள்ளது. இது உடல் தசைகளின் வளர்ச்சிக்கும், எலும்புகளின் வலிமைக்கும் மிகவும் அவசியம். மேலும் இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்களும் உள்ளன.

* இதில் சேர்க்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி போன்ற பொருட்கள் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்தவை. இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. சோம்பு மற்றும் சீரகம் செரிமானத்திற்கு மிகவும் நல்லது.

* பொட்டுக்கடலை சேர்ப்பதால் உருண்டைகள் நன்றாக பிசைய வரும். அதே சமயத்தில் நல்ல புரதச்சத்தும் கிடைக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்