நெல்லூர் செப்பலா புலுசு - அசத்தலான ஆந்திரா மீன் குழம்பு!

ஆந்திர உணவுகள் எப்போதும் காரசாரம் நிறைந்தவையாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது ஆந்திராவின் நெல்லூர் பகுதியில் ஃபேமசான ஒரு வித்தியாசமான மீன் குழம்பு ரெசிபிதான்.;

Update:2025-05-20 00:00 IST
Click the Play button to listen to article

ஆந்திர உணவுகள் எப்போதும் காரசாரம் நிறைந்தவையாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது ஆந்திராவின் நெல்லூர் பகுதியில் ஃபேமசான ஒரு வித்தியாசமான மீன் குழம்பு ரெசிபிதான். இதற்கு பெயர் "நெல்லூர் செப்பலா புலுசு". இதன் தனித்துவமான சுவையும், மணமும் உங்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும். இந்த சுவையான மீன் குழம்பை எப்படி செய்யலாம் என்று நமக்கு செய்து காட்டுகிறார் ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் திருப்பதி.


நெல்லூர் செப்பலா புலுசு செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு போடவும். கடுகு நன்றாக பொரிந்ததும் வெந்தயம் மற்றும் சீரகம் சேர்த்து வெடிக்க விடவும்.

பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து மசாலா வாசம் வரும்வரை லேசாக வதக்கவும்.


மீன் குழம்பிற்கான மசாலாக்களை தயார் செய்தல்

பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். தக்காளி நன்கு வெந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்வரை கொதிக்க விடவும்.

இப்போது புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் கீறிய பச்சை மிளகாய் மற்றும் சுத்தம் செய்த மீன் துண்டுகளை மெதுவாக சேர்க்கவும்.

குழம்பை மிதமான தீயில் 15-20 நிமிடங்கள்வரை மீன் நன்றாக வேகும்வரை கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.


மசாலாக்களை நன்கு வதக்கி கொதிக்க வைத்தல் 

இப்பொழுது சுவையான நெல்லூர் செப்பலா புலுசு மீன் குழம்பு தயார். இதை சூடான சாதம், தோசை அல்லது இட்லியுடன் பரிமாறவும். இந்த மீன் குழம்பு நிச்சயம் உங்கள் குடும்பத்தினருக்கு ஒரு புதுமையான மற்றும் சுவையான விருந்தாக இருக்கும்.

கூடுதல் தகவல்கள்

* இந்த குழம்புக்கு நீங்கள் எந்த வகையான மீன்களாக இருந்தாலும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு விதமான சுவையை கொடுக்கும். குறிப்பாக கொழுப்பு அதிகம் நிறைந்த மீன்களை பயன்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.

* காரசாரமாக சாப்பிட விரும்புபவர்கள் மிளகாய் தூளின் அளவை கூட்டிக்கொள்ளலாம்.

* புளிப்பு சுவையை விரும்பாதவர்கள் தக்காளி மற்றும் புளியின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.

* வெங்காயம் வதக்கும்போது சிறிது உப்பு சேர்த்தால் சீக்கிரம் வதங்கிவிடும்.


செப்பலா புலுசு மீன் குழம்பு தயார்... 

நெல்லூர் செப்பலா புலுசு-வின் நன்மைகள்

மீன் ஒரு ஆரோக்கியமான உணவு. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும், மீனில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

இந்த மீன் குழம்பில் சேர்க்கப்படும் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு போன்ற பொருட்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.

மஞ்சள் தூள் ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். மிளகு மற்றும் சீரகம் செரிமானத்திற்கு உதவுகின்றது. ஆக மொத்தத்தில் இந்த நெல்லூர் ஸ்டைல் மீன் குழம்பு சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.

வீட்டில் கண்டிப்பாக இந்த ரெசிபியை முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்