வேலையில் கவனம்
2025 ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் கல்வி நன்றாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். நண்பர்களுடனும், மூத்த சகோதர சகோதரிகளுடனும் உறவைப் பேணுவதில் கவனம் தேவை. இல்லையென்றால் அவர்கள் உங்களைப் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் பெரிய லாபம் இருக்காது. எனவே, பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆகஸ்ட் 16-க்குப் பிறகு வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உண்டு. உற்பத்தி சார்ந்த துறையினருக்கு இந்த வாரம் சராசரியாக இருக்கும். தேவையில்லாத மனக்குழப்பங்களைத் தவிர்த்து தைரியமாக இருங்கள். யூக வணிகத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. கல்வித் துறையில் இருப்பவர்களுக்குப் புகழும் வருமானமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எவ்வளவு உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைக்காமல் போகலாம். பணியிடத்தில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான சூழல்கள் உருவாகலாம். எனவே, வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. முருகன் மற்றும் துர்கையை வழிபடுவது பிரச்சனைகளைக் குறைக்கும்.