கடன்கள் குறையும்

Update:2025-09-02 00:00 IST

2025 செப்டம்பர் 02-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல விற்பனை உண்டு. தாயாரின் அன்பு மற்றும் ஆதரவு கிடைக்கும். தனியாக எந்தப் புதிய காரியத்தையும் தொடங்க வேண்டாம். மற்றவர்களை நம்பி செயல்படுவது நல்லது. பண வரவு இருந்தாலும், செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் குறைவாக இருக்கும். தொழில் சம்பந்தமான தகராறுகளும், நிச்சயமற்ற நிலையும் இருக்கும். ஆராய்ச்சி படிப்பு, வெளிநாடு செல்லுதல், கிரீன் கார்டு, குடியுரிமைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும், ஏற்கெனவே தொழிலில் இருப்பவர்களுக்கும் இந்த வாரம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்களைச் சந்திப்பது அவசியம். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை கவனம் தேவை. வேலையை விட்டு வெளியேற நேரிடலாம். கடன்கள் குறையும். நாள்பட்ட நோய்களின் தாக்கம் குறையும். பங்குச்சந்தை, லாட்டரி, யூக வணிகங்கள் போன்றவற்றில் கவனம் தேவை. அரசியல் மற்றும் விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் போராட்டங்கள் இருக்கும். இந்த வாரம் சித்தர்களையும் முருகப்பெருமானையும் வழிபடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்