முயற்சிகளில் வெற்றி
2025 செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் சொந்தத் தொழில் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது நல்ல நேரம். வெளிநாட்டில் குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சனி பகவான் உங்கள் முயற்சி ஸ்தானத்தைப் பார்ப்பதால், உங்கள் முயற்சிகள் தாமதமானாலும் வெற்றி பெறும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். உறவுகளால் நன்மையும் மகிழ்ச்சியும் உண்டு. பிரிந்த உறவுகள் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. வேலையின் காரணமாக எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். வேலை வாய்ப்பு நன்றாக இருக்கும். புதிய காதல் உறவுகள் உருவாக வாய்ப்புள்ளது. காதல் உறவில் இருப்பவர்களுக்கு எதிர்காலத்தில் அது திருமணத்தில் முடிய வாய்ப்புள்ளது. எதிர்பாராத மகிழ்ச்சி உண்டாகும். அசையாச் சொத்துக்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் உண்டு. பங்குச்சந்தை, ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றில் சாதாரண முதலீடுகளைச் செய்யலாம். உங்கள் ஆசைகள் நிறைவேறும். உங்கள் தொழில் சிறப்பாக இருக்கும். உங்கள் உழைப்பு அங்கீகரிக்கப்படும். இந்த வாரம் நீங்கள் துர்க்கையையும், முருகப்பெருமானையும் வழிபடுவது நல்லது.