பணவரவு உண்டு
2025 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் லாபம் கிடைக்கும். கணவர் அல்லது மனைவியின் மூலம் பணவரவு உண்டாகும். பென்ஷன், கிராஜுவிட்டி, இன்சூரன்ஸ் போன்ற வராத பணங்கள் இந்த வாரம் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பாராத பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும், நன்மையையும் தரும். சிறு மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு தொழில் நன்றாக இருக்கும். உறவினர்களால் நன்மை உண்டாகும். தகவல் தொடர்பு திறன் மேம்படும். வேலைவாய்ப்பில் திருப்தியற்ற சூழ்நிலை இருக்கலாம். உங்கள் வேலையில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் இருந்தாலும், பெரிய லாபம் இருக்காது. திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவிக்குள் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் அதிபர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். அரசாங்கத்தால் ஆக வேண்டிய காரியங்கள் நடைபெறும். நண்பர்களுடன் நல்ல உறவைப் பேணுவது அவசியம். இந்த வாரம் நீங்கள் முருகன் மற்றும் பெருமாளை வழிபடுவது உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்.