புதிய காதல் மலரும்
2025 ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் பொருளாதார நிலை சீராக இருக்கும். புதிய காதல் உறவுகள் உருவாகும். தொழில் முனைவோராக மாற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. அசையா சொத்துக்களை வாங்க வாய்ப்புகள் உண்டு. 12-ம் வீட்டில் ராகுவும் குருவும் இருப்பதால், வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலங்களில் முதலீடு செய்யலாம். ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விக்கு இது ஒரு நல்ல வாரம். பாஸ்போர்ட், விசா போன்றவற்றுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, சுமாரான பலன்கள் உண்டு. வேலையில் அதிக முயற்சி தேவை. வேலையைவிட்டு வெளியேற நேரிடலாம் என்பதால் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எதிரிகளால் பிரச்சனைகள் வரலாம். அசையா சொத்துக்கள் வாங்குவதற்கு இது ஒரு நல்ல நேரம். வருமானம் அதிகம் இருக்கும், ஆனால் செலவுகளும் அதிகமாகவே இருக்கும். உறவுகளை பேணிக்காப்பது அவசியம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல விற்பனை இருக்கும். இந்த வாரம் முருகனையும் பைரவரையும் வழிபடுங்கள்.