மேக்கப் எப்படி போட வேண்டும்? முக்கியமான டிப்ஸ்!
சிம்பிளாக ஒரு ப்ரைடல் மேக்கப் போடுவது எப்படி என்பது குறித்து விளக்கியுள்ளார் அழகுகலை நிபுணர் நிஷா கோஷ்.;
ஒப்பனை செய்துகொள்ள வேண்டும் என்பது பெண்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான ஆசை. திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு செல்லவேண்டும் என்றால், இப்போதெல்லாம் அனைவரின் மனதிலும் முதலில் எழும் எண்ணம் மேக்கப்தான். அதிலும் குறிப்பாக திருமணத்தில் மற்றவர்களைவிட மணப்பெண் தனித்துவமாக தெரியவேண்டும் என்பதற்காகத்தான் மணப்பெண் அலங்காரம் செய்யப்படுகிறது. மணப்பெண் அலங்காரம் என்பது நீண்டநேரம் எடுக்கும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதையும் எளிமையாக, நீண்ட நேரம் எடுக்காமல் விரைவாக போட்டுவிடலாம். அப்படி சிம்பிளான ஒரு மணப்பெண் லுக்கை கொண்டுவருவது எப்படி என விளக்கியுள்ளார் அழகுக்கலை நிபுணர் நிஷா கோஷ்.
ஐ-லென்ஸ் மற்றும் கன்சீலர் போடும்முறை
முதலில் லென்ஸ் போடவேண்டும். லென்ஸில் இருக்கும் அதே பழைய சொல்யூஷனை பயன்படுத்தாமல், வேறு சொல்யூஷனை பயன்படுத்துவது நல்லது. லென்ஸ் போடுவதற்கு முன் கையை நன்றாக கழுவவேண்டும். அடுத்து ஐ-ப்ரோஸ். சிலர் ஐ-ப்ரோஸை ஹார்டாக போடுவார்கள். அவர்களின் ஐ-ப்ரோவை, ஃபில் செய்து, ஹைலைட் செய்து காண்பித்தாலே போதும். அடுத்து கன்சீலர் போடவேண்டும். பின்னர் ப்ளெண்டர் வைத்து கன்சீலரை ப்ளெண்ட் செய்யவேண்டும். அடுத்து உங்களுக்கு என்ன ஐ-ஷேட் வேண்டுமோ அதை போட்டுக்கொள்ளலாம். நாம் போட்டிருக்கும் ஆடைநிறத்திற்கு ஏற்றவாறு ஐ-ஷேட் போட்டுக்கொள்ளலாம். அதற்காக பச்சை, நீலம் போன்ற ஷேடுகளை போட்டுவிடாதீர்கள். எடுக்கும்போதே ஐ-ஷேடை கம்மியாக எடுக்கவேண்டும். மேலும் லேசாக போட வேண்டும்.
ப்ளெண்டிங் மற்றும் லிப்ஸ்டிக் போடுதல்
ஏனெனில் லென்ஸ் போட்டிருப்பதால் கண் மிகவும் சென்சிட்டிவாக இருக்கும். வேண்டுமானால் சில்வர் கலர் கிளிட்டர் அப்ளை செய்துகொள்ளலாம். ஷேடோ, கிளிட்டர் போட்டபின் கொஞ்சம் தூரம் தள்ளி நின்று சரியாக போட்டிருக்கோமா என பார்க்கவேண்டும். அடுத்து ஐ-லேஷ் போட வேண்டும். லேஷை க்ளு வைத்து போடும்போது, க்ளூவை பார்த்துவைக்க வேண்டும். ஏனெனில் க்ளூ கண்ணிற்குள் சென்றால், கண் இன்ஃபெக்ஷன் ஆகிவிடும். அப்படி க்ளூ கண்ணுக்குள் போவதுபோல் தோன்றினால், பட்ஸை வைத்து கண்ணின் கார்னரில் இருந்து எடுத்தால் வந்துவிடும். மேக்கப்பின் ஹைலைட்டே ஐ-மேக்கப்பும், லிப்ஸ்டிக்கும்தான். இவற்றை கொஞ்சம் நீட்டாக, அழகாக போட்டுவிட்டாலே, டோட்டல் மேக்கப்பும் அழகாக இருக்கும். ஐ-மேக்கப்பிற்கு பிறகு ஐ-லேஷை கொஞ்சம் ட்ரையாக விடவேண்டும். சிலர் உடனே லைனர் போடுவார்கள். அப்போது க்ளூ காயாமல் லேஷில் வந்துவிடும். ஒரு 10 நிமிடமாவது ட்ரையாக நேரம் கொடுக்க வேண்டும். அந்தநேரத்தில், ஃபேஸ் மேக்கப்பை போடலாம்.
மேக்கப்பிற்கு பிறகு அதற்கேற்றவாறு நகைகள் போடுதல்
அடுத்து மாய்ச்சுரைசர் போட வேண்டும். முகம் முழுவதும் அப்ளை செய்யவேண்டும். அடுத்து முகத்திற்கு கன்சீலர் போடவேண்டும். அடுத்து முகநிறத்திற்கு ஏற்றவாறு ஃபவுண்டேஷன் போட வேண்டும். சில ப்ரைடுகளின் முகங்கள் பப்ளியாக இருக்கும். அவர்கள் முகத்தை சிறியதாக காட்ட சொல்வார்கள். அவர்களுக்கு காண்டோரிங் செய்வோம். காண்டோரிங் போட்டால் முகத்தை சிறியதாக காட்டலாம். காண்டோரிங் போட்ட இடத்தில் மட்டும் ப்ளெண்டிங் செய்ய வேண்டும். உங்களுக்கு க்ரீம், பவுடர் என எந்த வடிவத்தில் காண்டோரிங் வேண்டுமோ அதைப் போட்டுக்கொள்ளலாம். அடுத்து ஐ-லைனர். பின்னர் காம்பேக்ட் பவுடர். சிலர் மேக்கப் போடும்போது கழுத்து, காதை விட்டுவிடுவார்கள். அது இரண்டும் தனியாக, வித்தியாசமாக தெரியும். அதனால் காதுகள் மற்றும் கழுத்திற்கும் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட அனைத்து மேக்கப்பையும் போடவேண்டும். லிப்ஸ்டிக் போடுவதற்கு முன் லிப்லைனர் போடவேண்டும். சிலருக்கு முகத்திற்கு தகுத்த உதடுகள் இருக்காது. அப்போது உதடு அளவை கொஞ்சம் கட் பண்ணிக்கலாம். லிப் லைனரிலே ஒரு கோட்டிங் கொடுத்தால் நன்றாக இருக்கும். அடுத்து லிப்ஸ்டிக் போடலாம். இறுதியாக நகைகளை போட்டுக் கொள்ளலாம்.