மணமகளுக்கு முகூர்த்த நேரத்தில் 10 நிமிடத்தில் போடக்கூடிய சிம்பிள் ஹேர்ஸ்டைல்!

சைடு பார்ட்டிஷன் ஹேர்ஸ்டைல் முறையை எளிதாக செய்வது எப்படி என விளக்கியுள்ளார் அழகுக்கலை நிபுணர் நிஷா கோஷ்.;

Update:2025-09-09 00:00 IST
Click the Play button to listen to article

இந்திய திருமணங்களில் எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பது உணவு, உடை, சடங்குகள்தான். ஆனால் இப்போதெல்லாம் எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பது மேக்கப்தான். அதுவும் மணமகன் மற்றும் மணமகள் தனியாக தெரியவேண்டும் என்பதற்காகவே இப்போதெல்லாம் திருமணங்களில் மேக்கப் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மணமகன், மணப்பெண் என இருவருக்கும் வெவ்வேறு அலங்கார முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதிலும் மணப்பெண் அலங்காரம் மற்றும் மணப்பெண் சிகை அலங்காரத்தில் பலவகைகள் உள்ளன. அதில் தங்களது ரசனைக்கு ஏற்ற, அலங்காரங்களை மணப்பெண்கள் தேர்வு செய்து கொள்கின்றனர். அந்தவகையில், ஒரு சிம்பிள் ப்ரைடல் மேக்கப் போடுவது எப்படி என கடந்தவாரம் விளக்கிய அழகுக்கலை நிபுணர் நிஷா கோஷ், அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் சிம்பிள் ப்ரைடல் ஹேர் ஸ்டைல் செய்வது எப்படி என விளக்கியுள்ளார். சைடு பார்ட்டிஷன் ஹேர்ஸ்டைல் முறையை அழகாக செய்து காட்டியுள்ளார். 


சைடு பார்ட்டிஷன் ஹேர் ஸ்டைல் செய்ய முடியை பிரித்தல்

தலைமுடியை நன்கு சிக்கில்லாமல் வாரி, நேர் வகுடு எடுத்து முதலில் நெத்திச்சுட்டியை வைக்க வேண்டும். நெத்திச்சுட்டிக்கு சப்போர்ட்டாக இருக்கும் ஊக்கை முடியில் குத்திக் கொள்ளலாம். பின்னர் மணப்பெண்ணின் முகவடிவத்திற்கு ஏற்ப ஹேர்ஸ்டைல் செய்துகொள்ளலாம். என்ன ஹேர்ஸ்டைல் வேண்டுமோ அதை செய்துவிட்டு, வேண்டுமானால் ஹேர் எக்ஸ்டென்ஷன் வைத்துக் கொள்ளலாம். நம் மாடலுக்கு சைடு பார்ட்டிஷன் எடுத்து பின்னல் போட உள்ளோம். நெத்திச்சுட்டியை வைத்துவிட்டு, இடப்பக்கம் சைடு பார்ட்டிஷன் முடி எடுத்து, லேசாக பேக் கோம்ப் செய்து, அதனை ட்விஸ்ட் செய்து கொண்டேவந்து வலதுபக்கம் அதனை ஸ்லைடு பயன்படுத்தி குத்திக்கொள்ள வேண்டும். மீதியுள்ள இடதுபக்க முடியை, அந்த பக்கமே ட்விஸ்ட் செய்து ஸ்லைடு போட்டுவிட வேண்டும். 


ஹேர் ஸ்டைல் முடிந்தபின் பூ வைத்து அலங்கரித்தல்

மணப்பெண் கட்டியிருக்கும் சேலையின் நிறத்திற்கு ஏற்றவாறு, ஹைலைட் செய்யப்பட்டிருக்கும் எக்ஸ்டென்ஷன் ஹேரை இப்போது தலையில் ஃபிக்ஸ் செய்ய வேண்டும். ஹேர் எக்ஸ்டென்ஷனில் இருக்கும் கிளிப்பை வைத்து முடியை கிளிப் போட்டுக் கொள்ளலாம். விருப்பப்பட்டால் குஞ்சம் வைத்து பின்னிக் கொள்ளலாம். அழகுக்காக பேபி ப்ரீத் பூக்களை வைத்துக் கொள்ளலாம்.


சிகை அலங்காரம் முழுமையாக முடிந்தபிறகு...

முடியின் இறுதிவரை பின்னல் போட்டு, மெஸ்ஸி லுக் கொண்டுவந்து ரப்பர் பேண்ட் போடலாம். பின்னலுக்கு கூடுதல் அழகுசேர்க்க ஜடைபில்லையை பயன்படுத்தலாம். ஜடைபில்லைக்கு பதில் சின்ன சின்ன பூக்களை கூட பின்னலில் வைத்து அலங்கரிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்