மெனிக்கியூர், பெடிக்கியூர் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?

மெனிக்கியூர், பெடிக்கியூர் எல்லாம் ஒரு அழகு சிகிச்சை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை உடல்நலன் சார்ந்ததாம், பெடிக்கியூர் செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.;

Update:2025-07-15 00:00 IST
Click the Play button to listen to article

மெனிக்கியூர், பெடிக்கியூர் எல்லாம் ஒரு அழகு சிகிச்சை என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை உடல்நலன் சார்ந்தது எனவும்., பெடிக்கியூர் செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளார் அழகுகலை நிபுணர் ஸ்ரீதேவி. பெடிக்கியூர், மெனிக்கியூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம். 


பெடிக்கியூரின் போது பாதங்களுக்கு செய்யப்படும் மசாஜ்

பெடிக்கியூர்

பெடிக்கியூர் முக்கியமான ஒன்று. எல்லோரும் அதை அழகுக்காக செய்கிறோம் என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பெடிக்கியூர் என்பது உடல்நலம் சம்பந்தப்பட்டது. நம்முடைய கால் பாதம் எந்தளவு நன்றாக உள்ளதோ, அதற்கேற்றவாறுதான் நம் உடல்நலன் இருக்கும். பாத வெடிப்புகள் மூலம் கிரிமி நாசினிகள் உடலுக்குள் செல்கின்றன. எவ்வளவு பெரிய பாதவெடிப்பு என்றாலும், மாதம் ஒருமுறை பெடிக்கியூர் செய்தால் சரியாகிவிடும். அப்போது நோய்தொற்று வருவது கடினம். நம் கால்களில் இருந்துதான் நிறைய நோய் தொற்றுகள் வருகின்றன. நம் காலை நன்றாக வைத்துக் கொண்டாலே, உடல்நலனும் நன்றாக இருக்கும். பெடிக்கியூரின் போது செய்யப்படும் மசாஜ், இரத்த ஓட்டத்தை சீராக்கும். கால்வலியை தடுக்கும். நிறைய பேர் பெடிக்கியூர் எதற்காக செய்து கொள்கிறோம் என்பதே தெரியாமல் இருக்கிறார்கள். ஆனால் இதனை மாதத்திற்கு ஒருமுறை செய்துகொண்டால் மிக நல்லது. பெடிக்கியூர் செய்துகொள்ளும்போது, நல்ல ஓய்வு கிடைக்கும். பெடிக்கியூர் செய்துகொள்ளுதல் உங்கள் உடல்நலத்திற்கு நல்லது. மேலும் பெடிக்கியூர் மசாஜ், வெரிகோஸ் பிரச்சனைகள், ரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சனைகள், கால் வலிகள் போன்றவற்றை குணமாக்கும். பெடிக்கியூர் என்பது வெறும் மேக்கப் அல்ல, உடல்நலன் சம்பந்தப்பட்டது என்ற விழிப்புணர்வு அனைவரிடத்திலும் வரவேண்டும். அதனால்தான் பெடிக்கியூர் குறித்த விளக்கங்களை நான் இங்கு கூறுகிறேன்.


மெனிக்கியூர் செய்வதும் உடல்நலத்திற்கு நல்லது!

மெனிக்கியூர்

கை நகங்கள் என்பது மிக முக்கியமான ஒன்று. அதை நாம் எப்படி பராமரிக்கிறோம் என்பது மெனிக்கியூர் செய்யும்போதுதான் புரியும். இதுகுறித்து பலருக்கும் தெரியாது. கல்யாணம் என்றால் ஃபேசியல் எவ்வாறு செய்கிறோமோ, அதைப்போல மெனிக்கியூர் என்பதும் மிக முக்கியம். மணமகன், மணமகள் என அனைவருக்கும் செய்வோம். ஒரு திருமணத்தில் நம் கை, கால்களை அழகாக காட்டுவது மிக முக்கியம். திருமணம் செய்து கொள்பவர்கள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது அழகு, உடல்நலன் என இரண்டிற்கும் மிக நல்லது. மெனிக்கியூரின் போது கையில் இருக்கும் இறந்த செல்களை முற்றிலுமாக அப்புறப்படுத்திவிடுவார்கள். காலிலும் அனைவருக்கும் இறந்த செல்கள் இருக்கும். தண்ணீரில் காலை ஊறவைத்து, அதை சோப்பு போட்டு நன்கு கழுவும்போது அந்த இறந்த செல்கள் அப்படியே வந்துவிடும். மெனிக்கியூர் செய்துகொண்டால் கைகளில் நகங்கள் நன்றாக வளரும். மெனிக்கியூர் அனைவரும் செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், இறந்த செல்கள் நகங்களை ஆரோக்கியமாக இருக்கவிடாது. சின்ன சின்ன விஷயங்களிலும் நிறைய நன்மைகள் உள்ளன. அதனை நாம் பார்க்க வேண்டும். அதனால் சலூன்களில் மெனிக்கியூர், பெடிக்கியூர் செய்துகொள்வது மிக முக்கியம். எல்லோரும் ஃபேசியலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் மெனிக்கியூர், பெடிக்கியூர் என்பதுதான் மிக முக்கியம். 

Tags:    

மேலும் செய்திகள்