தெலுங்கு மணப்பெண் டூ கேரள மணப்பெண்! 5 நிமிடத்தில் மாற்றம்! எப்படி தெரியுமா?

தெலுங்கு ப்ரைடல் மேக்கப் லுக்கை அப்படியே ஆல்டர் செய்து, கேரளா திருமணத்திற்கு எப்படி செல்வது என்பது குறித்து விளக்கியுள்ளார் அழகுகலை நிபுணர் கோமதி.;

Update:2025-08-26 00:00 IST
Click the Play button to listen to article

கடந்த வாரம் ராணி ஆன்லைன் பியூட்டி பகுதியில் தெலுங்கு ப்ரைடல் மேக்கப் போடுவது எப்படி என்பது குறித்து அழகு கலை நிபுணர் கோமதி விளக்கியிருந்தார். இந்நிலையில் தெலுங்கு ப்ரைடல் லுக்கை அப்படியே ஆல்டர் செய்து கேரளா வெட்டிங் லுக்கிற்கு எப்படி கொண்டு வருவது என்பது குறித்து விளக்கியுள்ளார். அதுகுறித்து இங்கு காண்போம்.


ஃபவுண்டேஷனும், லூஸ் பவுடரும் அதிகமாக போடக்கூடாது - கோமதி

தெலுங்கு ப்ரைடல் - மலையாள ப்ரைடல்...


ப்ரைடல் லுக்கிற்கு மேக்கப் எவ்வளவு முக்கியமோ அதுபோல நகைகளும், பூவும் முக்கியம்

கேரள திருமணத்திற்கு ஐமேக்கப் மிகவும் முக்கியமானது. அதனால் ஐலைனரை எந்தளவிற்கு லுக்காக வரைய முடியுமோ அந்தளவிற்கு லுக்காக வரைந்து கொள்ளலாம். நாம் பவுண்டேஷன் அப்ளை பண்ணிவிட்டோம். அதனால் கன்சீலர் பண்ண வேண்டாமென்று எப்போதும் நினைக்க வேண்டாம். உங்களுக்கு எப்போதெல்லாம் கலர் கொஞ்சம் டல்லாகுதோ, அப்போது நீங்கள் எந்த கன்சீலர் பேஸ் எடுத்தீர்களோ, அதையே மறுபடி அப்ளை செய்து கொள்ளலாம். கன்சீலர் அப்ளை செய்துவிட்டோம், ஃபவுண்டேஷன் போட்டாச்சு, ஃபிக்ஸிங் பவுடர் போட்டுவிட்டோம், திரும்பவும் ஃபிக்ஸிங் பவுடர் போடலாமா என யோசிக்கவேண்டாம். ஷிம்மர் வைத்து ஐஷேடோவை கொஞ்சம் மாற்றலாம். தெலுங்கு ப்ரைடலுக்கு வரைந்த ஐப்ரோவை ஆல்டர் பண்ணிகிறோம். கொஞ்சம் ஹைலைட்டாக தெரிய வேண்டும் என்பதற்காக, என்ன ஐஷேடோ பயன்படுத்தினோமோ, அதைவைத்து ஐலைனர் கீழே ஒரு லைன் வரையலாம். கேரள திருமணம் என்றாலே கண்ணை நன்றாக எடுத்துக்காட்ட வேண்டும்.


கேரளா வெட்டிங் லுக்

அதனால் கண்ணின் கீழ் இருக்கும் லைனிலும், கீழ் லேஷசிலும் மஸ்காரா அப்ளை செய்யவேண்டும். மேக்கப்பில் எல்லாமே முக்கியம்தான். குறிப்பாக ஐமேக்கப் மிகவும் முக்கியமானது. காரணம், முகத்தை நாம் பார்க்கும்போது, கண்ணும், ஐ-லேஷஷும்தான் முதலில் தெரியும். அதனால் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நாம் ஏற்கனவே மேக்கப் போட்டிருப்பதால், அதிகமாக ஃபவுண்டேஷனும், அதற்குமேல் லூஸ் பவுடரும் போட்டால் ரொம்ப ஒருமாதிரியாக ஆகிவிடும். அதனால் கொஞ்சமாக கன்சீலர் பயன்படுத்தலாம். நன்றாக ப்ளெண்ட் செய்யவேண்டும். நாம் என்ன பிராண்ட் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமல்ல. ப்ளெண்டிங்தான் முக்கியம். கடைசியாக செட்டிங் ஸ்பிரே போட்டு மேக்கப்பை செட் பண்ணிடலாம். மறுபக்கம் கேரள திருமணத்திற்கு ஏற்ப ஹேர்ஸ்டைல் செய்துவிட்டு, பூவைத்து, நகைகள் போட்டுக் கொள்ளலாம். நிச்சயம் துளசி வைக்கவேண்டும். ஒரு மணப்பெண் அலங்காரம் செய்கிறோம் என்றால், மேக்கப், ஹேர்ஸ்டைல் மட்டும் முக்கியமல்ல. அந்த மேக்கப்பிற்கு ஏற்றவாறு நகைகளையும் மேட்ச் ஆக போடவேண்டும். அப்போதுதான் முழுமையடைந்ததுபோல் இருக்கும். 

Tags:    

மேலும் செய்திகள்