குழந்தை பாக்கியம்

Update:2025-07-29 00:00 IST

2025 ஜூலை 29-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் வேலைவாய்ப்புகள் நன்றாக இருக்கும். வியாபாரம் சாதாரணமாகவே இருக்கும்; லாபம் குறைவாக இருக்கலாம். காதல் உறவுகளில் போராட்டங்கள் இருக்கலாம், தடைகள் ஏற்படலாம். அதே சமயம், புதிய காதல் உறவுகள் மலரவும் வாய்ப்பு உண்டு. அம்மாவின் உடல் ஆரோக்கியத்திலும், உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். உற்பத்தி சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்குத் தகுந்த விற்பனை இருக்கும். தெய்வ அனுகூலம் உண்டு. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனங்கள் ஏற்படலாம். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு தெய்வ அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சியும், நன்மையும், ஏற்றமும், முன்னேற்றமும் உண்டாகும். அறுவை சிகிச்சை செய்ய நினைப்பவர்கள் இந்த வாரம் செய்யலாம். யாருக்கும் ஜாமீன் அல்லது பாதுகாப்பு கொடுக்க வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்பு இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். உயர்கல்வி நன்றாக இருக்கும். எதிர்பாராத நட்பு வட்டம் உருவாகும். நண்பர்களால் வாழ்க்கையில் மாற்றமும், முன்னேற்றமும், மகிழ்ச்சியும் உண்டாகும். மூத்த சகோதர சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும். பிரிந்த உறவுகள் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் முருகப்பெருமானையும், காளியையும் வழிபடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்

புதிய வரவு