குழந்தை பாக்கியம்
2025 ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் மற்றும் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக சுப காரியங்கள் தள்ளிப்போனவர்களுக்கு, அது நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எதிர்பாராத தெய்வ தரிசனம் உண்டாகும். குடும்பத்தில் புதிய வரவு வர வாய்ப்பு உண்டு. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு ஏற்ற நல்ல விற்பனை மற்றும் லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஓரளவுக்கு லாபம் உண்டு. தாயின் அன்பு மற்றும் ஆதரவு கிடைக்கும். கல்வியில் கவனம் செலுத்துங்கள். எட்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால், தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். பயணங்களின் போது கவனமாக இருங்கள். எலிவேட்டர், லிஃப்ட் போன்றவற்றில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. உறவுகளால் மனவருத்தங்களும் பிரச்சனைகளும் வரலாம் அல்லது உறவுகள் பிரிய நேரிடலாம். வியாபாரம் சுமாராக இருக்கும். பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். கூட்டாளியுடன் வியாபாரம் செய்தால், உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கை சுமாராக இருக்கும். இந்த வாரம் குலதெய்வத்தையும் முருகப்பெருமானையும் வழிபடுங்கள்.