குழந்தைகளால் மகிழ்ச்சி

Update:2025-09-23 00:00 IST

2025 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் இறைவனின் அருள் உங்களுக்குக் கிடைக்கும். பேச்சின் மூலம் வருமானம் வந்தாலும், செலவுகள் அதிகமாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் புதிய வரவுக்கான வாய்ப்பு உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புகழ் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெற, கூடுதல் முயற்சி தேவை. உங்கள் தைரியமும், தன்னம்பிக்கையும் வெற்றியைத் தரும். இளைய சகோதரர்களால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. பிரிந்த உறவுகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தொடங்கும். வேலைவாய்ப்பில் கவனம் தேவை, ஏனெனில் வேலையில் ஸ்திரத்தன்மை குறைவாக இருக்கலாம். தொழில் ரீதியாக முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்காலத்தில் பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பு இல்லை. மணவாழ்க்கையில் சிறிய சண்டைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நண்பர்களால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், முன்னேற்றமும் இருக்கும். இந்த வாரம் நீங்கள் பெருமாளையும், மகாலட்சுமியையும் வழிபடுவது சிறந்தது.

Tags:    

மேலும் செய்திகள்