ஆசைகள் நிறைவேறும்
2025 ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் வருமானம் சீராக இருக்கும். எதிர்பாராத உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் எண்ணங்கள் மற்றும் ஆசைகள் நிறைவேறும். 5-ம் இடத்தில் குரு மற்றும் சுக்கிரன் இருப்பதால், குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும். புதிய வரவு குடும்பத்தில் சேர வாய்ப்பு உண்டு. யூக வணிகத்தில் அதாவது ஷேர், ரேஸ், லாட்டரி, ஆன்லைன் டிரேடிங் போன்றவற்றில் குறைந்த முதலீடு செய்வது நல்ல லாபம் தரும். வேலை தேடுபவர்களுக்கு இந்த வாரம் வேலை கிடைக்கும். வியாபாரம் ஆகஸ்ட் 16-க்குப் பிறகு சுமாராக இருக்கும். அதற்கு முன் நன்றாக இருக்கும். திருமண வாழ்வில் சிறு சிறு பிரச்சனைகள் 17-க்குப் பிறகு வரலாம். 8-ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. தந்தையின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். உற்பத்தித் துறையினருக்கு விற்பனை நன்றாக இருக்கும். மூத்த சகோதர சகோதரிகள் மற்றும் எதிர்பாராத நட்புகளால் உங்களுக்கு நன்மை உண்டு. சிவன் மற்றும் முருகனை வழிபடுவது நன்மையைத் தரும்.