ஆசைகள் நிறைவேறும்
2025 செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் 2025 அக்டோபேர் 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம், உங்கள் பேச்சின் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும். வருமானம் இருந்தாலும், செலவுகளும் உண்டு. கடந்த காலத்தில் நிறைவேறாத ஆசைகள், இந்த வாரம் திடீரென நிறைவேற வாய்ப்புள்ளது. குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு அது கிடைக்கும். எதிர்பாராத ஆலய தரிசனம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். எதிர்பாராத சுற்றுலா அல்லது பயணம் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்திலும், தாயாரின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. உங்கள் வியாபாரம் சாதாரணமாகவே இருக்கும். கூட்டாளிகளுடன் சேர்ந்து வியாபாரம் செய்தால், அவர்கள் லாபம் அடைவார்கள், அல்லது நீங்கள் அவர்களுக்காக உழைக்க நேரிடும். இரண்டாம் திருமணம் முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். நண்பர்கள் மூலம் வாழ்க்கையில் மாற்றமும், முன்னேற்றமும் உண்டாகும். மூத்த சகோதர, சகோதரிகளாலும் நன்மை உண்டு. வேலைவாய்ப்பில் கவனம் தேவை. வேலையில் பிரச்சனைகள் அல்லது நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வேலையை திருப்தியாகச் செய்யுங்கள். விவசாயத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டு. உற்பத்தி அல்லது உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் நீங்கள் சிவன் மற்றும் மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.