உடல் ஆரோக்கியத்தில் கவனம்

Update:2025-09-02 00:00 IST

2025 செப்டம்பர் 02-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் வேலைவாய்ப்பு உண்டு. சூரியன் மற்றும் புதன் சேவை ஸ்தானத்தில் இருப்பதால் ஏதேனும் ஒரு வேலை உங்களுக்கு கண்டிப்பாக இருக்கும். ஆனால், போட்டிகள் நிறைந்த தேர்வுகளிலும், நேர்முகத் தேர்வுகளிலும் வெற்றி பெற நிறைய போராட்டங்கள் இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து மற்றும் வருமானம் கூடும். பங்குச்சந்தை, ஆன்லைன் வியாபாரம் போன்ற முதலீடுகளில் நிதானமாக செயல்படுங்கள். ஓரளவுக்கு மட்டுமே வருமானம் கிடைக்கும். எட்டாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திலும், வண்டி வாகனங்களிலும் கவனம் தேவை. உறவுகளைப் பராமரிப்பது முக்கியம். இளைய சகோதரி , சகோதரர்களால் மனவருத்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக விற்காத சொத்துக்கள் இந்த வாரம் விற்கப்படும். வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்காது. லாபத்தை மற்றவர்கள் பெறுவார்கள். பார்ட்னர்ஷிப்பில் வியாபாரம் செய்தால் நஷ்டம் ஏற்படும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு இந்த வாரம் வாய்ப்புகள் உண்டு. நண்பர்களால் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். மூத்த சகோதரி சகோதரர்களால் நன்மை உண்டு. இந்த வாரம் பைரவரையும் முருகப்பெருமானையும் வழிபடுவது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்