முன்னேற்றம் உண்டு
By : ராணி
Update:2023-11-21 00:00 IST
2023, நவம்பர் 21 முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எதிர்பாராத பயணம் மற்றும் அந்தப் பயணத்தால் மகிழ்ச்சி இருக்கிறது. நீண்ட நாட்களாக இடம், வீடு, வாகனம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க யோசித்திருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். ஆட்டோமொபைல், உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். லோன் கிடைக்கும். கணவன் - மனைவி உறவு சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் பார்ட்னருக்கு லாபமும், உங்களுக்கு நஷ்டமும் ஏற்படும். உயர் கல்விக்கு வாய்ப்புகள் உண்டு. புதிய தொழிலில் முதலீடு செய்யலாம். லோன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.